தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், அரிசி மாவு, முளைகட்டிய பயறு, பொடியாக நறுக்கிய தக்காளி, குடமிளகாய் - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயறை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடலைமாவு, அரிசிமாவு, தக்காளி, குடமிளகாய், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு மூடியால் மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்தவுடன் மூடியை எடுத்துவிட்டு ஆம்லெட்டை திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.